Category: Uncategorized
மார்கழி Times!
தடைகளை மீறி தூங்குதல் என்பது ஒரு கலை.அதிலும் ஊரே கூடி எழுப்பும் போதும் அசராமல் தூங்குவது ஒரு ஆகப்பெருங்கலை. அவ்வளவு சீக்கிரம் இந்த ஆகப்பெரும் கலையானது எல்லோருக்கும் வாய்க்காது.இது புரியாத வெளி உலகம் இதனை தூக்கம் என்று கருதி எங்களை பாடாய் படுத்தும் ஆனால் எங்களுக்கு தான் தெரியும் நாங்கள் லயித்திருப்பது ஒரு ஆழ்நிலை தியானத்தில் என்று. எங்கள் கேங்கிற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்காக ரமணா படம் போல எங்கள் கேங்கை சேர்ந்த ஆட்கள்…
அலெக்ஸா, Play ஆண்டாளிஸம் Please!
நமக்கு பிடித்தவருக்கு நம்மை பிடிக்கும் தருணம் வாய்க்கும் வரையில் காதல் ஒரு வித பித்து நிலையிலேயே நம்மை வைத்திருக்கும். அந்த சமயத்தில் ஊருக்குள் இருக்கும் அத்தனையும் நமக்கு அவுட் ஆப் போக்கஸில் இருக்கும் (சில பேருக்கு ஊரே அவுட் ஆப் போக்கஸ் தான்!). அனுப்பிய வாட்சப்ப் மெசேஜ் read என்று வந்தும் பதில் வராத அந்த தருணங்கள் காதலின் வெயில் பொழுதுகள். அப்பொழுதுகளுக்கு கொஞ்சமும் பச்சாதாபமே இருக்காது.இது போதாதென்று காத்திருப்பின் வாஞ்சைக்கும் முடிவற்ற தவிப்பிற்கும் இடையில் சிக்கி…
Times are Changing 🙂
வரும் அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், தனது துணை அதிபர் வேட்பாளராக ஓஹாயோ மாகாண செனட்டரான ஜே. டி வான்ஸ்’ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார் . நேற்றிரவு மக்கள் முன்னிலையில் ஜே டியின் அறிமுகப்படலம் நடந்து முடிந்தது. பார்ப்பதற்கு வெப்சீரிஸில் வரும் கூல் டாட் போல இருக்கும் வான்ஸின் பயோவைப் படித்தால் ஒரு காலத்தில் அவர் ரக்கட் பாயாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஜேடியின் பூர்வீகம் ஒஹையோ மாகாணத்தில் உள்ள மிடில் டவுன்…
Save Doctors!
மருத்துவர்கள் என்றாலே ரமணா சீன் ஞாபகத்திற்கு வருகிற ரீதியில் ஒரு வகையான மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறையான பொதுபுத்தி இங்கே நிலவுகிறது. ரியாலிட்டியில் அவர்களின் ஒரு நாள் வுர்க் ஸ்ட்ரெஸை நம்மால் யோசித்துக்கூட பார்க்கமுடியாது. கோவிட் காலக்கட்டத்தை சற்றே நாம் ரீவிசிட் செய்ய வேண்டும். கிண்டி சம்பவம் நிகழ்ந்த அன்றே ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஒருவர் அவரிடம் சிகிச்சைக்காக வந்த பாதிக்கப்பட்ட இளைஞரால் கத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்த செய்தி – சிசேரியன் தான் வேண்டும்…
Need of the Hour!
அண்ணா யுனிவ் செய்தியை படிக்க படிக்க எரிச்சலாக வருகிறது.. முன்பெல்லாம் வீடு வீடாக சென்று ‘இந்தெந்த தடுப்பு ஊசி போட்டாச்சா .. வீட்டுல எத்தனை பேர் இருக்கீங்க.. பசங்க பள்ளிக்கூடத்துக்கு போறாங்களா’ என்று விசாரித்தபடி இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அரசு பணியாளர்கள் வருவார்கள். அது போல இனி வீதி வீதியாக வந்து வீட்டில் உள்ள20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் குறிப்பாக திருமணமானவர்களை உட்கார வைத்து‘ உங்கள் அரைவேக்காட்டுத்தனமான பாலியல் புரிதலால் யாரையும் துன்புறுத்தும் எண்ணம்…
பெரிதினும் பெரிது கேள்
கொல்கத்தாவில் பயிற்சி டாக்டரை கொடூரமாக தாக்கிக்கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இப்படிப்பட்ட சைக்காட்டிக்கான பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காலம் முழுக்க நல்லொழுக்க பாடம் எடுப்பதில் இருக்கும் மனிதநேய எண்ணம் சத்தியமாக விளங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் பெற்றோரே தங்கள் பதினாறு வயது மகளை தவறான வழியில் ஈடுபடுத்திய கொடுமையான செய்தி வெளிவந்தது. கேரளாவில் பதின்வயது சிறுமியை ஐந்து ஆண்டுகளாக துன்புறுத்திய வழக்கில் இதுவரை 57 பேர்(3 மைனர்…
அழகு சிலேடை
கடந்த சில வாரங்களாக நானும் வசந்தும் ஒரு வித ஜென் நிலையை அடைந்து வருகிறோம். பிள்ளையாண்டான் வைத்து செய்கிறான். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் ‘தா தா’ மொழி தான். தண்ணீர் வேண்டும் என்றாலும் தா.. தேங்க்யூ என்றாலும் தா.. அதை எடுத்து தாங்க என்றாலும் தா.. தாத்தா என்றாலும் தா தான் தமிழில் இதை சிலேடை என்பார்க்ள். (அர்த்தத்தோடு வரும் பட்சத்தில்) ஒரு சொல்லோ ஒரு தொடரோ திரும்ப திரும்ப வெவ்வேறு அர்த்தங்களில் வந்து பொருள் தந்தால் அது…
சுவர்கிறுக்கல்கள்
படுக்கையறையில் குறுக்கும் நெடுக்குமாக தானிட்ட கலர் கலர் கோடுகளுக்குள் வீட்டு மாடியில் ஆட்டம் போட்ட சூரியனையும் டிவியில் வெடித்து சிதறிய எரிமலையையும் கண்டு சிரித்தது குழந்தை தோசையம்மா தோசை பாட்டு பார்த்த ஞாபகத்தில் பாட்டில் வந்த பாப்பாவை சுவற்றில் கோணலானதொரு சிறு வட்டமாயிட்டது குழந்தை எப்படி யோசித்தாலும் மனதை விட்டகலாத Z ஃபார் ஜீப்ராவை பெரியதும் சிறியதுமாய் அடுக்கடுக்காய் கோடுகளிட்டு தோசைப்பாப்பாவுக்கு பக்கத்தில் நடமாட விட்டது குழந்தை அதற்குள் எரிமலை முச்சூடும் வெடித்து சிதறிவிட ப்பூ ப்பூ…
அப்பாவும் தேவதையும்
அவள் விகடன் மீடியா பேஜ் வெளீயானது அப்பாவும் தேவதையும் வாசல் வழி தலை தெரிய விக்கித்து நின்றார் அப்பா. லாவகமாய் அவரது கைகளில் வந்து விழுந்தது ஒரு தேவதை! பால் குடித்து முடித்த ஒரு மதியம் அள்ளி எடுத்து கொஞ்ச வந்தார் அப்பா. முதன் முதலாய் ஏறெடுத்து பார்த்து அனுமதி தந்தது தேவதை! வெளி உலகம் பிழிய களைத்து போய் வீடு வந்திருந்தார், அப்பா. இதழ் குவித்து ‘ப்பா’ என்று அவரைக்கட்டிக் கொண்டது தேவதை! விளையாடி முடித்து …
வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்!
காந்தி உலக மையம் நடத்திய உலகளாவிய தமிழ் கவிதைப்போட்டியில் முதல் பரிசு -2021 ( நடுவர் கவிஞர் சிநேகன், கவிஞர் பழநி பாரதி, அறிஞர் பர்வீன் சுல்தானா) ***************************** யாரும் பார்க்காதவொரு மதியப்பொழுதின் மரநிழலில் இளங்காதல் நெஞ்சமிரண்டு இமைகள் மூடி விரல்கள் கோர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சட்டென மென்தென்றல் லேசாக வருடிட மரக்கிளைத் தூளியில் அசந்துறங்கும் சிசுவின் முதல் சிரிப்பைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மழை நின்ற நாளில் மரப்பொந்தில் பாதி நனைந்தக் கூட்டை சரிப்படுத்தும் தாய்ப்பறவையின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா?…