-
கிரிஜா
தென்றல் இதழில் வெளியானது கிரிஜா ப்ரீத்தி வசந்த் கிரிஜா, அவள் வயதிற்கு மிக பாந்தமாக இருப்பாள் . அழுக்கு சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரள வைக்கும்.செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான். கிரிஜாவை நான் முதன் முதலில் அவள் அலுவலக இடத்தில் வைத்து தான் சந்தித்தேன். அழுது கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிக் கூட்டம். ‘என்ன,ஏது’ என்று விசாரிக்க முடியாத அளவிற்கு ‘..ச்சூச்சோ’ கொட்டும் வெறும் கூட்டம். கூட்டத்தில்…
-
ஒரு நாள் கடவுள்
தென்றல் நாளிதழில் வெளியானது “ஹேய் மனோ .. “ கூப்பிட்ட குரலில் இருந்த அன்னோனியம் , பீக் ஹவர் ட்ராபிக்கில் கூட என்னை அறியாமல் திரும்பி பார்க்க செய்தது.பாக்கி!!!! “பாக்கி….நீயா…எப்டி இருக்க…என்னால நம்பவே முடியல …!” “ஆமால?!” தெத்துபல் தெரிய அழகாக சிரித்தாள். ஒரு சில நொடிகள் பரஸ்பரம் சிரித்து கொண்டே இருந்தோம். “என்னடா பிளாஷ்பாக் போறியா?” என்று நக்கலாக கேட்டாள் . ‘சரிசரி இப்படி நீ பேர்லல் ரைடிங் பண்ணா போலீஸ்காரன் என்ன…
-
மஞ்சள் மாத்திரை
சிறுகதை -1 ப்ரீத்தி வசந்த் ‘என்னங்க?’ ‘ஹ்ம்ம்’ ‘என்ன்ன்னன்னங்க??!’ ‘ஹ்ம்ம் வந்துட்ட்டேன்!’ இப்போதும் செல்லவில்லை என்றால் அடுத்து நிர்மலா கூப்பிடும் தொனியில் பக்கத்து வீட்டு ‘என்னங்க’ இங்கே வந்து விடுவார் .அதனால் டிவி ரிமோட்டோடு மெதுவாக எழுந்து அவள் அருகில் சென்றேன். ‘சண்டே ஆனா டிவி தானா? நேத்திக்கே சொன்னேன்ல?! இப்போ பாருங்க அபிக்கு காய்ச்சல் ஜாஸ்தி ஆகிடுச்சு’ என்று அவள் சொன்ன போது அவளின் களைத்து போயிருந்த முகத்தில் வருத்தம் சேர்ந்து இன்னும் அவளைக் …
-
அம்மா தெரிகிறாள்..
போன ராத்திரிகட்டில் தலைமாட்டில் விடுபட்டகண்ணாடி குடுவையைகாலையில் வீடெங்கும் தேடியபடி அம்மா தெரிகிறாள்… தரையில் காலாரஉள்மூச்சு வாங்கும் இசையோடுஉள்ளுக்குள் வாயசைத்தப்படிதினமலரை புரட்டும் அம்மா தெரிகிறாள்.. எதற்காகவோ ஏதோவொருரசீதை தேட சென்றவள்பீரோவை இரைத்துப்போட்டுஇடையில் தட்டுப்பட்டபழைய ஆல்பமொன்றில்மருகி தொலைந்தபடி அம்மா தெரிகிறாள்.. பழகிய தெருக்களின்நினைவு அகலாதகனவு அடுக்குகளில்சிக்கித் திரிகின்றஎன்னை கவனித்தபடி அம்மா தெரிகிறாள்.. தூக்கம் கலைந்துநடுவறைக்கு வந்ததும்‘பாப்பா.. இத்தன மணிக்கு எழுந்துவந்தாஉடம்பு என்னத்துக்கு ஆகும்’என்னையே எதிர்பார்த்து முனகியபடி இன்னமும் அம்மா தெரிகிறாள்.. -ப்ரீத்தி வசந்த் Image – Magdalena Wozniak Melissourgaki
-
கதை கேளு… கதை கேளு!
வளையொலி கலைஞர் திரு வீரா அவர்களின் குரலில் ஸ்டோரிடெல் ஒலித்தளத்தில் வெளிவந்த “ கிருஷ்ணார்ப்பணம்” சிறுகதையை கேட்க வளையொலி கலைஞர் திருமதி தீபிகா அருண் (கதையோசை) அவர்களின் குரலில் ஸ்டோரிடெல் ஒலித்தளத்தில் வெளிவந்த “கிரிஜா” சிறுகதையை கேட்க ஒலித்தளத்தில் வெளிவந்த “கிரிஜா” சிறுகதையை கேட்க https://youtu.be/CxxHj9y10wQ https://youtu.be/CxxHj9y10wQ எனது குரலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘இப்போ என்னா சார் சொல்ற’ சிறுகதையை கேட்க எனது குரலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘தர்க்கத்திற்கு அப்பால்’’ சிறுகதையை கேட்க










