• பெரிதினும் பெரிது கேள்

    கொல்கத்தாவில் பயிற்சி டாக்டரை கொடூரமாக தாக்கிக்கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இப்படிப்பட்ட சைக்காட்டிக்கான பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காலம் முழுக்க நல்லொழுக்க பாடம் எடுப்பதில் இருக்கும் மனிதநேய எண்ணம் சத்தியமாக விளங்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் பெற்றோரே தங்கள் பதினாறு வயது மகளை தவறான வழியில் ஈடுபடுத்திய கொடுமையான செய்தி வெளிவந்தது. கேரளாவில் பதின்வயது சிறுமியை ஐந்து ஆண்டுகளாக துன்புறுத்திய வழக்கில் இதுவரை 57 பேர்(3 மைனர்…

  • அழகு சிலேடை

    கடந்த சில வாரங்களாக நானும் வசந்தும் ஒரு வித ஜென் நிலையை அடைந்து வருகிறோம். பிள்ளையாண்டான் வைத்து செய்கிறான். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் ‘தா தா’ மொழி தான். தண்ணீர் வேண்டும் என்றாலும் தா.. தேங்க்யூ என்றாலும் தா.. அதை எடுத்து தாங்க என்றாலும் தா.. தாத்தா என்றாலும் தா தான் தமிழில் இதை சிலேடை என்பார்க்ள். (அர்த்தத்தோடு வரும் பட்சத்தில்) ஒரு சொல்லோ ஒரு தொடரோ திரும்ப திரும்ப வெவ்வேறு அர்த்தங்களில் வந்து பொருள் தந்தால் அது…

  • சுவர்கிறுக்கல்கள்

    படுக்கையறையில் குறுக்கும் நெடுக்குமாக தானிட்ட கலர் கலர் கோடுகளுக்குள் வீட்டு மாடியில் ஆட்டம் போட்ட சூரியனையும் டிவியில் வெடித்து சிதறிய எரிமலையையும் கண்டு சிரித்தது குழந்தை தோசையம்மா தோசை பாட்டு பார்த்த ஞாபகத்தில் பாட்டில் வந்த பாப்பாவை சுவற்றில் கோணலானதொரு சிறு வட்டமாயிட்டது குழந்தை எப்படி யோசித்தாலும் மனதை விட்டகலாத Z ஃபார் ஜீப்ராவை பெரியதும் சிறியதுமாய் அடுக்கடுக்காய் கோடுகளிட்டு தோசைப்பாப்பாவுக்கு பக்கத்தில் நடமாட விட்டது குழந்தை அதற்குள் எரிமலை முச்சூடும் வெடித்து சிதறிவிட ப்பூ ப்பூ…

  • அப்பாவும் தேவதையும்

    அவள் விகடன் மீடியா பேஜ் வெளீயானது அப்பாவும் தேவதையும்  வாசல் வழி தலை தெரிய  விக்கித்து நின்றார் அப்பா. லாவகமாய் அவரது  கைகளில் வந்து விழுந்தது  ஒரு தேவதை!  பால் குடித்து முடித்த  ஒரு மதியம் அள்ளி எடுத்து  கொஞ்ச வந்தார் அப்பா.  முதன் முதலாய் ஏறெடுத்து  பார்த்து அனுமதி தந்தது தேவதை! வெளி உலகம் பிழிய  களைத்து போய்  வீடு வந்திருந்தார், அப்பா.  இதழ் குவித்து ‘ப்பா’ என்று  அவரைக்கட்டிக் கொண்டது தேவதை! விளையாடி முடித்து …

  • வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்!

    காந்தி உலக மையம் நடத்திய உலகளாவிய தமிழ் கவிதைப்போட்டியில் முதல் பரிசு -2021 ( நடுவர் கவிஞர் சிநேகன், கவிஞர் பழநி பாரதி, அறிஞர் பர்வீன் சுல்தானா) ***************************** யாரும் பார்க்காதவொரு மதியப்பொழுதின் மரநிழலில் இளங்காதல் நெஞ்சமிரண்டு இமைகள் மூடி விரல்கள் கோர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சட்டென மென்தென்றல் லேசாக வருடிட மரக்கிளைத் தூளியில் அசந்துறங்கும் சிசுவின் முதல் சிரிப்பைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மழை நின்ற நாளில் மரப்பொந்தில் பாதி நனைந்தக்  கூட்டை சரிப்படுத்தும்   தாய்ப்பறவையின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா?…

  • மேய்ப்பன்

    மேய்ப்பன் ப்ரீத்தி வசந்த்  (படைப்பு இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  அவர்களால் முதல் பரிசுக்கு தேர்வான சிறுகதை )  இன்று சீக்கிரத்திலேயே விழிப்பு  வந்துவிட்டது . ஜன்னல் வழியாக மீனு வாசல் தூர்த்துவிடும் சத்தம் கேட்டதும்  ‘தினமும் இது போல சீழ்பட்ட  மனதையும் யாராவது வாரி  தூர்த்து விட்டால் எத்தனை தோதாக இருக்கும்?’ என்று தோன்றியது ஜனாவிற்கு.  தன்னை மறந்து ஒரு கணம் நீண்ட யோசனையில் ஆழ்ந்தவனின்  கவனத்தை சட்டென கலைத்தது,செல்போன் அழைப்பு. …