வாசிப்பை போல போதை வேறு உண்டா என்ன.
அந்த வகையில் ஆங்கிலத்தில் இப்போது வாசித்துக்கொண்டிருப்பது
அனிதா நாயர் எழுதிய Ladies Coupe . ஒரு மகளிர் மட்டும் ரயில் பெட்டி . ஐந்து பெண்கள். வெவ்வேறு சூழலில் இருந்து பெண்மையின் ஒவ்வொரு பரிமாணங்களில் பிரவேசித்துக்கொண்டிருக்கும் அந்த ஐந்து பேரும் எதார்த்தமாக சந்தித்துக்கொள்ளும் போது அவர்கள் சம்பாஷணைகள் என்னவாக இருக்கும்.. என்பது தான் கதையின் முத்தாய்ப்பு. கதையின் நாயகி அகிலா.
இன்னும் திருமணம் ஆகாத 45 வயது பேரிளம்பெண். இப்போது தான் ரயில் ஏறி அமர்ந்திருக்கிறாள். ரயில் அசையும் ஓசையோடே மனதில் வாசிப்பு தொடர்கிறது
சமீபமாக படித்துக்கொண்டிருப்பது திருமழிசை ஆழ்வார் எழுதிய நான்முகன் திருவந்தாதி.
அப்பப்பா!
ஆழ்வாரின் தமிழை ரசிப்பதா?
அவர் சொல்லும் விதத்தை ரசிப்பதா?
இத்தனை காலம் ஆகியும் தமிழ்சுவையும் பொருட்சுவையும் தளும்பும் தேன் ஊறிய பாசுரங்கள் எல்லாம் எப்படி இயற்றியிருப்பார் ஆழ்வார்?
விளங்கவில்லை.
கள்ளும் குறையவில்லை.
தெவிட்டாத தமிழ் இன்பத்தேனும் விட்டபாடில்லை!