தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

Tell me about yourself என்று நேர்காணலில் கேட்பார்கள். இந்த பக்கம் வரை எட்டிப்பார்த்த உங்களின் மைன்ட் வாய்ஸ்ஸூம் அது தானே. 🙂

நான் ப்ரீத்தி வசந்த்.

திகட்ட திகட்ட தினம் தமிழ் படிக்கும் காதல்க்காரி.

கொஞ்சம் மழையும் நிறைய காதலும் மனதிற்குள் தேக்கி வைத்து கவிதை படைத்துக்கொண்டிருக்கிறேன்.

முடிவடையாத நாளின் எச்சம் கனவாவதைப்போல சொல்ல மிச்சமுள்ள பிம்பங்கள் சில என் சிறுகதைகளாகிவிடும்.

இதற்கிடையில் வள்ளுவனும் ஆண்டாளும் கம்பனும் பாரதியும் எதையாவது படிக்க வைத்து இம்சிப்பார்கள். சேமித்து வைக்க தோதில்லாமல் அவை கட்டுரைகளாக்கி விடுவதுண்டு.

அனுபவமோ ஆற்றாமையோ, பெருந்தாகமோ என் கீபோர்ட் கசிந்தவற்றையெல்லாம் கொஞ்சமேனும் சேகரிக்கும் முயற்சியே இந்த வலைதளம்

எழுத்தும் வாசிப்பும் ஒரு காலானுபவம். தொடங்குதல் மிக எளிது. முடிப்பதென்பது முடியாத காரியம். எனவே ஒரு கூழாங்கல்லினைப் போல கடந்து வரும் வழிகளெங்கும் பண்பட்டு தொடர்கிறது என் எழுத்துப் பயணம்.

கவிதை, சிறுகதை, மொழிப்பெயர்ப்பு, இலக்கியம் பாட்காஸ்ட் என்று இப்போதைக்கு பிரித்து வைத்து என் படைப்புகளை சேர்த்திருக்கிறேன். இன்னும் சிறார் இலக்கிய படைப்புகள், பட்டிமன்ற தரவுகள் சேர்க்க வேண்டியுள்ளது. அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும் என நினைக்கிறேன். அதுவரை வலைத்தளத்தில் சேர்த்துள்ளவற்றை படித்து மகிழுங்கள் 🙂

இது நேரம் அவரை வாசித்தமைக்கு அன்பும் நன்றியும். 🙂

சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்ய கீழே க்ளிக்குங்கள்

Category: Uncategorized

  • மேய்ப்பன்

    மேய்ப்பன் ப்ரீத்தி வசந்த்  (படைப்பு இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  அவர்களால் முதல் பரிசுக்கு தேர்வான சிறுகதை )  இன்று சீக்கிரத்திலேயே விழிப்பு  வந்துவிட்டது . ஜன்னல் வழியாக மீனு வாசல் தூர்த்துவிடும் சத்தம் கேட்டதும்  ‘தினமும் இது போல சீழ்பட்ட  மனதையும் யாராவது வாரி  தூர்த்து விட்டால் எத்தனை தோதாக இருக்கும்?’ என்று தோன்றியது ஜனாவிற்கு.  தன்னை மறந்து ஒரு கணம் நீண்ட யோசனையில் ஆழ்ந்தவனின்  கவனத்தை சட்டென கலைத்தது,செல்போன் அழைப்பு. …

  • கிரிஜா

    தென்றல் இதழில் வெளியானது கிரிஜா  ப்ரீத்தி வசந்த்  கிரிஜா, அவள்  வயதிற்கு மிக  பாந்தமாக இருப்பாள் . அழுக்கு சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரள வைக்கும்.செய்கிற வேலையில்   சற்று  அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை  நான்.  கிரிஜாவை நான் முதன் முதலில் அவள் அலுவலக இடத்தில் வைத்து தான் சந்தித்தேன். அழுது கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிக் கூட்டம். ‘என்ன,ஏது’ என்று விசாரிக்க முடியாத அளவிற்கு ‘..ச்சூச்சோ’ கொட்டும் வெறும் கூட்டம். கூட்டத்தில்…

  • ஒரு நாள் கடவுள்

    தென்றல் நாளிதழில் வெளியானது “ஹேய் மனோ .. “ கூப்பிட்ட   குரலில்  இருந்த  அன்னோனியம் , பீக் ஹவர் ட்ராபிக்கில் கூட என்னை அறியாமல்   திரும்பி பார்க்க செய்தது.பாக்கி!!!! “பாக்கி….நீயா…எப்டி இருக்க…என்னால நம்பவே முடியல …!” “ஆமால?!” தெத்துபல் தெரிய அழகாக சிரித்தாள்.  ஒரு சில நொடிகள் பரஸ்பரம் சிரித்து கொண்டே இருந்தோம். “என்னடா பிளாஷ்பாக் போறியா?” என்று நக்கலாக கேட்டாள் . ‘சரிசரி இப்படி நீ பேர்லல் ரைடிங் பண்ணா போலீஸ்காரன் என்ன…

  • மஞ்சள்  மாத்திரை 

    சிறுகதை -1                                            ப்ரீத்தி வசந்த் ‘என்னங்க?’ ‘ஹ்ம்ம்’ ‘என்ன்ன்னன்னங்க??!’ ‘ஹ்ம்ம் வந்துட்ட்டேன்!’  இப்போதும் செல்லவில்லை என்றால் அடுத்து நிர்மலா கூப்பிடும் தொனியில் பக்கத்து வீட்டு  ‘என்னங்க’ இங்கே வந்து விடுவார் .அதனால் டிவி ரிமோட்டோடு மெதுவாக எழுந்து அவள்  அருகில் சென்றேன். ‘சண்டே ஆனா டிவி தானா? நேத்திக்கே சொன்னேன்ல?! இப்போ பாருங்க அபிக்கு காய்ச்சல் ஜாஸ்தி ஆகிடுச்சு’ என்று அவள் சொன்ன போது அவளின் களைத்து போயிருந்த முகத்தில் வருத்தம் சேர்ந்து இன்னும் அவளைக் …

  • கதை கேளு… கதை கேளு!

    வளையொலி கலைஞர் திரு வீரா அவர்களின் குரலில் ஸ்டோரிடெல் ஒலித்தளத்தில் வெளிவந்த “ கிருஷ்ணார்ப்பணம்” சிறுகதையை கேட்க  வளையொலி கலைஞர் திருமதி தீபிகா அருண் (கதையோசை) அவர்களின் குரலில் ஸ்டோரிடெல் ஒலித்தளத்தில் வெளிவந்த  “கிரிஜா” சிறுகதையை கேட்க ஒலித்தளத்தில் வெளிவந்த  “கிரிஜா” சிறுகதையை கேட்க https://youtu.be/CxxHj9y10wQ https://youtu.be/CxxHj9y10wQ எனது குரலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘இப்போ என்னா சார் சொல்ற’ சிறுகதையை  கேட்க  எனது குரலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘தர்க்கத்திற்கு அப்பால்’’ சிறுகதையை  கேட்க