Your cart is currently empty!
Category: கவிதை
அம்மா தெரிகிறாள்..
போன ராத்திரிகட்டில் தலைமாட்டில் விடுபட்டகண்ணாடி குடுவையைகாலையில் வீடெங்கும் தேடியபடி அம்மா தெரிகிறாள்… தரையில் காலாரஉள்மூச்சு வாங்கும் இசையோடுஉள்ளுக்குள் வாயசைத்தப்படிதினமலரை புரட்டும் அம்மா தெரிகிறாள்.. எதற்காகவோ ஏதோவொருரசீதை தேட சென்றவள்பீரோவை இரைத்துப்போட்டுஇடையில் தட்டுப்பட்டபழைய ஆல்பமொன்றில்மருகி தொலைந்தபடி அம்மா தெரிகிறாள்.. பழகிய தெருக்களின்நினைவு அகலாதகனவு அடுக்குகளில்சிக்கித் திரிகின்றஎன்னை கவனித்தபடி அம்மா தெரிகிறாள்.. தூக்கம் கலைந்துநடுவறைக்கு வந்ததும்‘பாப்பா.. இத்தன மணிக்கு எழுந்துவந்தாஉடம்பு என்னத்துக்கு ஆகும்’என்னையே எதிர்பார்த்து முனகியபடி இன்னமும் அம்மா தெரிகிறாள்.. -ப்ரீத்தி வசந்த் Image – Magdalena Wozniak Melissourgaki