தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

Tell me about yourself என்று நேர்காணலில் கேட்பார்கள். இந்த பக்கம் வரை எட்டிப்பார்த்த உங்களின் மைன்ட் வாய்ஸ்ஸூம் அது தானே. 🙂

நான் ப்ரீத்தி வசந்த்.

திகட்ட திகட்ட தினம் தமிழ் படிக்கும் காதல்க்காரி.

கொஞ்சம் மழையும் நிறைய காதலும் மனதிற்குள் தேக்கி வைத்து கவிதை படைத்துக்கொண்டிருக்கிறேன்.

முடிவடையாத நாளின் எச்சம் கனவாவதைப்போல சொல்ல மிச்சமுள்ள பிம்பங்கள் சில என் சிறுகதைகளாகிவிடும்.

இதற்கிடையில் வள்ளுவனும் ஆண்டாளும் கம்பனும் பாரதியும் எதையாவது படிக்க வைத்து இம்சிப்பார்கள். சேமித்து வைக்க தோதில்லாமல் அவை கட்டுரைகளாக்கி விடுவதுண்டு.

அனுபவமோ ஆற்றாமையோ, பெருந்தாகமோ என் கீபோர்ட் கசிந்தவற்றையெல்லாம் கொஞ்சமேனும் சேகரிக்கும் முயற்சியே இந்த வலைதளம்

எழுத்தும் வாசிப்பும் ஒரு காலானுபவம். தொடங்குதல் மிக எளிது. முடிப்பதென்பது முடியாத காரியம். எனவே ஒரு கூழாங்கல்லினைப் போல கடந்து வரும் வழிகளெங்கும் பண்பட்டு தொடர்கிறது என் எழுத்துப் பயணம்.

கவிதை, சிறுகதை, மொழிப்பெயர்ப்பு, இலக்கியம் பாட்காஸ்ட் என்று இப்போதைக்கு பிரித்து வைத்து என் படைப்புகளை சேர்த்திருக்கிறேன். இன்னும் சிறார் இலக்கிய படைப்புகள், பட்டிமன்ற தரவுகள் சேர்க்க வேண்டியுள்ளது. அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும் என நினைக்கிறேன். அதுவரை வலைத்தளத்தில் சேர்த்துள்ளவற்றை படித்து மகிழுங்கள் 🙂

இது நேரம் அவரை வாசித்தமைக்கு அன்பும் நன்றியும். 🙂

சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்ய கீழே க்ளிக்குங்கள்

Need of the Hour!

அண்ணா யுனிவ் செய்தியை படிக்க படிக்க எரிச்சலாக வருகிறது..

முன்பெல்லாம் வீடு வீடாக சென்று ‘இந்தெந்த தடுப்பு ஊசி போட்டாச்சா .. வீட்டுல எத்தனை பேர் இருக்கீங்க.. பசங்க பள்ளிக்கூடத்துக்கு போறாங்களா’ என்று விசாரித்தபடி இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அரசு பணியாளர்கள் வருவார்கள்.

அது போல இனி வீதி வீதியாக வந்து வீட்டில் உள்ள
20 வயதிற்கு மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் குறிப்பாக திருமணமானவர்களை உட்கார வைத்து
‘ உங்கள் அரைவேக்காட்டுத்தனமான பாலியல் புரிதலால் யாரையும் துன்புறுத்தும் எண்ணம் உள்ளதா?’
‘உங்கள் எழவெடுத்த மரமண்டையில் வல்னரபிளான சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளவயதினர் இவர்களையெல்லாம் பாலியல் தொந்தரவு செய்யலாம் என்ற எண்ணம் வருகிறதா ? அப்படி வருகிற பட்சத்தில் அடுத்தவன் பிள்ளைய தன் பிள்ளையா பார்க்கணும்ங்கிற அடிப்படை மனிதாபிமான அறிவு எட்டிப்பார்க்கிறதா இல்லையா. ? ஒருவேளை இல்லையென்றால் என்ன எழவை எப்படி சொல்லிக்கொடுத்தால் அந்த எண்ணம் வரும்?
’நடந்த பாலியல் குற்றத்தில் குற்றவாளியை தண்டிக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு மாரல் போலிஸிங் செய்யும் படித்து பட்டம்பெற்ற தற்குறியா நீங்கள் ’
என்றெல்லாம் கட்டாய பாலியல் கல்வி சர்வே எடுத்து.. இப்படியாகப்பட்ட ஜந்துக்களை வேறுபடுத்தி அவரவர் வீட்டு சுவற்றில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்து மற்றவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *