வரும் அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், தனது துணை அதிபர் வேட்பாளராக ஓஹாயோ மாகாண செனட்டரான ஜே. டி வான்ஸ்’ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார் . நேற்றிரவு மக்கள் முன்னிலையில் ஜே டியின் அறிமுகப்படலம் நடந்து முடிந்தது.
பார்ப்பதற்கு வெப்சீரிஸில் வரும் கூல் டாட் போல இருக்கும் வான்ஸின் பயோவைப் படித்தால் ஒரு காலத்தில் அவர் ரக்கட் பாயாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.
ஜேடியின் பூர்வீகம் ஒஹையோ மாகாணத்தில் உள்ள மிடில் டவுன் . அப்பலேச்சியன் மலை பிரதேசத்திலன் தென்மேற்கு புறநகர் தான் இந்த மிடி. மிடியில் நிலவிய கடுமையான வேலையின்மை , வறுமை, தனது அம்மாவின் போதை பழக்கம், அதே சமயத்தில் கண்டிப்பான பாட்டியின் வளர்ப்பு , பாட்டியால் பள்ளிப்படிப்பை தொடர்ந்தது, அமெரிக்க கடற்படையில் வேலை, பிறகு ஆறு மாதம் ஈராக்கில் பணி , திரும்புகையில் பாட்டியின் மரணம், யேல் பல்கலையில் சட்டப்படிப்பு , இதனூடே அவருக்கு துணையாக நின்ற காதல் என அவரது வாழ்க்கை அக்மார்க் தமிழ் திரைப்பட பயோபிக்’கின் கருப்பொருள். அவருக்கும் இது மனதில் பட்டிருக்கிறது போல. அடுத்தவருக்கு வேலை வைக்காமல் அவரே தனது வாழ்க்கைப்பயணத்தை 2016ல் Hillbilly Elegy என்ற புத்தகமும் எழுதிவிட 2020ல் அதை படமாகவும் எடுத்திருக்கிறார்கள். படம் படுதோல்வி. புத்தகம் சூப்பர்ஹிட். நியூ யார்க் டைம்ஸின் பெஸ்ட் ஸெல்லரும் கூட. சொல்லப்போனால் 2019ல் ட்ரம்ப் வெற்றிப்பெற்ற காரணங்களில் ஒன்றாக இந்த புத்தகத்தை குறிப்பிடுகிறார்கள் . அந்தளவிற்கு அரசியல் சூழலில் பேசுப்பொருளான புத்தகம், அதன் வழி தொடங்கிய தனது அரசியல் பயணம் என மெல்ல மெல்ல விரிந்து இப்போது ட்ரம்பின் ரன்னிங் மேட் ஆகியிருக்கிறார்.
யூகித்தது போலவே ட்ரம்பின் சமீபத்திய புகைப்படத்திலிருந்து பேச்சைத் தொடங்கி அம்மா சென்டிமென்ட்டிற்கு இணையான தனது ரகட் + பேட்ரியாட்டிக்கான பாட்டி சென்டிமென்ட்டை நடுநடுவே தேவையான அளவு சேர்த்து தனது முதல் பேச்சுரையில் சிக்சர் அடித்து விட்டார், ஜேடி.
நிற்க,
ஜேடியை விபியாக ட்ரம்ப் அறிவிக்கப் போகிறார் என்றதுமே ஜேடியின் புத்தகம் அமேசானில் மீண்டும் சக்கைப்போடு போடுகிறதாம். நெட்ஃப்ளிக்ஸும் சளைத்ததில்லை. நேற்றைய தினம் மட்டும் 19.2 மில்லியன் நிமிடங்கள் ஜே.டியின் திரைப் படம் பார்க்கப்பட்டிருக்கிறது என அறிவித்திருக்கிறது. உலகமெங்கும் என்னைப் போல எவ்வளவு பேர் சும்மா இருக்கிறார்கள் என்று நினைத்தாலே பூரிப்பாக இருக்கிறது.
முக்கியமான சேதி. ஒரு வகையில் ஜே டி’ நமக்கு தூ…ர..த்து உறவு . ஜே டி’யின் வீட்டுக்காரம்மா, உஷா சுந்தர தெலுங்கர். அப்படி பார்த்தால் கூகிளே நம் கம்பேனி தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான். காசா பணமா
கொசுறு சேதி. ஜேடி இஸ் ஜஸ்ட் 39. இந்த தேர்தலில் அதிபர் ட்ரம்ப் வென்று ஜேடி துணை அதிபரானால் மிகவும் இளமையான துணை அதிபர் என்று அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிப்பாராம். மனதிலும் பிடிப்பாரா? லெட்ஸ் ஸீ்
Leave a Reply