தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

இலக்கியம்

இந்த பக்கத்தில் எனக்கு மிக பிடித்த தமிழ் இலக்கிய கட்டுரைகள் இடம்பெறும். 

என்னை பொறுத்தவரை தமிழில் இலக்கியம் மிகவும் அண்டர்ரேடட் . 

இன்னமும் பொருள் மாறாத உச்சரிப்பு மாறாத புழக்கத்தில் இருக்கும் பல நூற்றாண்டு பழமையான இலக்கிய சொற்கள் ஏராளம். அந்த அளவிற்கு வளமையானது  நமது மொழி. இலக்கியம் அதன் நாடி. திருக்குறளில் தொடங்கி சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம், இலக்கண அணிகள் அதில் பொதிந்து கிடக்கும்  சுவாரசியமான நுணுக்கங்கள் என நம் அருகிலேயே இருந்தும் நாம் அதிகம் கண்டுக்கொள்ளாத அழகான அதிதேவதை தமிழ் இலக்கியம். 

அதிலும் பக்தி இலக்கியம் எனக்கு மிகவும் பிடித்த கடற்கரை. 

முதல் முறை ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல் படித்து பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. யோக நிலையின் அத்தனை அம்சங்களையும் மிக எளிதாக நுணுக்கமாக விளக்கும் அற்புதமான பாடலில் எனக்கு பிடித்த வரிகள் இவை : 

அணுவிற்கு  அணுவாய் 

அப்பாலுக்கு அப்பாலாய்  

கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 

என்கிறார் அவ்வையார். 

அணுவிற்கு  அணு = சிறியதிலும் சிறியதாய்  

அப்பாலுக்கு அப்பாலாய் =  தொலைவிலும் தொலைவாய்  

என்று முதலில் தோன்றியது. பிறகு ஒரு வேளை  பிக் பாங்-ஐ குறிக்கிறாரோ என்று பட்டது. காரணம் அப்பால் என்ற சொல் பயன்பாடு. 

  • The singularity was a point that was much smaller than an atom or grain of sand. The singularity exploded with tremendous force, creating matter and propelling it outward. As the universe expanded and cooled, subatomic particles merged into atoms. 

என்று பிக்பாங் விளக்கப்படுகிறது. சுருங்கி அகலும் பிரபஞ்ச கோட்பாட்டை யோக நிலையோடு கோர்த்தது போல அமைந்த பாடலில் அணு /அப்பால் என்ற அடர்த்தியான சொற்களின்  பயன்பாட்டை பார்த்து பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இப்படி நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் தேட ஆரம்பிப்பது இதில் ஏதாவது ஒன்றைத்தான். தினம் தினம் ஏதாவது புதிதாக தெரியும் அளவிற்கு ஆழமான கடலில் இருந்து நான் எழுதி தொகுத்த கட்டுரைகள் சில கீழே. இவற்றில் பல ஏற்கனவே எனது facebook பக்கத்தில் உள்ளது. உங்களுக்காக சில இங்கே. 

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்